oomayin sorkkal
Thursday, August 5, 2010
ஆட்டிசம் ஒரு அதிசயம்
ஆட்டிசம் பத்தி தெர்யுமா? எனக்கு தெரிய வந்தது என் பய்யன் மூலமாகத்தான். அவனுக்கு ஆட்டிசம்னு டாக்டர் சொன்னதும் என்ன்னால நம்ப முடியல. என் பையனுக்கு அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாதுன்னு ஒரு நம்பிக்கை. ஆட்டிசத்த எப்படியெல்லாம் கண்டு பிடிக்கலாம் , என்ன பண்ணலாம்னு டாக்டர் சொன்னங்க. ஒரு வருசம் ஆச்சு. நல்ல முன்னேற்றம் அவன்கிட்ட. என்னோட அனுபவத்த எல்லார்கிட்டேயும் சொல்லனும்னு நெனச்சேன்.ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் இருக்குற நெறைய பேருக்கு உதவனும்னு என்னோட ஆசை. இனி அடிக்கடி ப்ளாக் எழுதனும்னு முடிவு பண்ணி இருக்கேன். இனிமேல் பேசுவோம் .
Thursday, April 15, 2010
இவங்க மாறவே மாட்டாங்களா?
எனக்கு மெய்யாலுமே ஸ்கூட்டி ஓட்ட தெரியாதுங்க. எங்க நைனா வுடல. அப்புறம் கல்யாணம் ஆயிருச்சு.சரின்னு வூட்டுக்காரர் கிட்ட கேட்டேன். அவர் என்னடான ,ஸ்கூட்டி ஓட்ட தெரிஞ்சா நீ எங்கனயாச்சும் போய்கினே இருப்ப அதனால வேண்டாம்னு சொல்லிடாரு. நான் தெரியாம தான் கேக்குறேன்? ஸ்கூட்டி ஒட்டிகீட்டு நான் என்ன சந்திர மண்டலத்துக்கா போக போறேன். இவங்க மாறவே மாட்டாங்களா?.
நாங்களும் வந்துடோம்ல
நான் ஜெயிலுக்கு போறேன் ஜெயிலுக்கு போறேன்னு வடிவேலு சொல்லற மாதிரி நானும் ப்ளாக் எழுதபோறேன் ப்ளாக் எழுத போறேன்னு கெளம்பிட்டேன். (முடியல). எத்தன நாளைக்கு தான் பொறுமையா இருக்கறது அதான் பொங்கி எழுந்துட்டேன். இம்... கிளப்புங்கள் .....
Subscribe to:
Posts (Atom)